சிலேடைப் புலவர் காளமேகம், தென்னை மரத்தையும் ஒரு கணிகை எனக் கொள்ளலாம் என்கிறார் இப்பாடல் மூலம்.
என்ன ஒரு கற்பனை...பாருங்கள்
பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்
கூறும் கணிகையென்றே கொள்.
பாரத் தலைவிரிக்கும் - தென்னை மரத்தின் ஓலைகள் எல்லாப் பக்கங்களும்
நீண்டு, விரிந்து இருக்கும். (கணிகைப் பெண்ணும் கூந்தலை விர்த்துத்
தொங்கவிட்டு அலங்காரம் செய்திருப்பாள்.) பன்னாடை மேல் சுற்றும் -
தென்னையில் பன்னாடை சுற்றிக் கொண்டிருக்கும். (அவளும் பலவண்ண ஆடைகளை
அணிந்திருப்பாள்.) சோர இளநீர் சுமந்திருக்கும் - தென்னோலைகளுக்குள்
மறைந்து இளநீர்க் குலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். (கணிகையும் இடைதளரும்
வகையில் இளநீர்போன்ற கொங்கைகளைச் சுமந்துகொண்டிருப்பாள்). ஏறி இறங்கவே
இன்பமாம் - தென்னையில் ஏறி இளநீர் பருகி இறங்குவது மிகவும் இன்பமாக
இருக்கும். (கணிகையும் அப்படித்தான்.) ( அதனால் தென்னை மரத்தையும் கணிகைப்
பெண்ணென்று கொள்ளலாம் என்பது பாடலின் பொருள்.)

அடிக்கடி காளமேகத்தின் பாடல்களை பதிவிடுங்கள் தொடர்கிறோம்
ReplyDeleteசிலேடைக் கவியின் சிகரமாய் வாழ்ந்த
வலவனே இக்காள மேகம் - உலகைத்
திருடியுள்ளி ருக்கும் ! தமிழமுதைத் தேனாய்
அருந்தக் கொடுத்தான் அறிவு !
தம 1